Monday, August 15, 2016


















பேருந்திலே ஜன்னல் ஓரம்..
வழியோர மரங்கள்,
ஒருவேளை  நேரில் நான் கண்டால் எப்படி உணர்வேன் ??
இதயம் படபடத்து , இன்பமான இம்சைகள் ஏதேனும் நிகழுமோ?
எதிர் பார்த்து காத்திருந்த அந்த நாள்.... .
உன் விழிகளைவிட,இமைகளைதான் எனக்கு மிகவும் பிடிக்கும- ஏனெனில்
அவைகள்தான்  என்னை அனுமதிக்கின்றன உன்னை பார்க்க..நீ விழி மூடுகையில் !!!

Wednesday, July 22, 2015

என் வீட்டில் பூர்த்த
உனக்கு பிடித்த நிறத்தில்
ஒற்றை ரோஜா
என் மனசை தட்டிய
உன் பெயர் நுழைந்த
ஒரு கவிதை
காதலர் தினப்பரிசாக
என் இருதயம் கொடுத்தது
என்னவளுக்காக..

Tuesday, July 15, 2014



தாயின் மடி தேடி இருக்கிறேன், 
வளர்ந்த பருவத்தில் 
கிடைத்ததில்லை,,,,,,,,,,,,,,, . 
இப்போது உணருகிறேன், இப்படி தான் 
இருக்குமோ தாயின் மடி , இத்தனை சுகமாக ?


என் முதல் கவிதை அனுபவம் ,,,,,,,,,,,,,,,,,,

வீணையை மீட்டினால் ஸ்வரம் எழும் என்பார்கள் 
என்னை ஒரு வீணை மீட்டியத்தில் 
எழுந்த ஸ்வரங்கள் தான் இவை அத்தனையும்
அதை அந்த வீணைக்கே கொடுப்பதுதான் ஞாயம் அல்லவா ?


இவ்வுலகின் அதிஅற்புதமான
கவிதை...
என் தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

நான் உன்னில்
என்னைத்தொலைத்துவிட்டு
சிரித்துக்கொண்டிருகிறேன்
இனியவளே!
நான்
பிறந்தவுடன்
கண் திறந்தேன்...
உன்னை
காதலித்தவுடன்
நினைவு மறந்தேன்...
நீ
மறந்தவுடன்
உயிர் துறப்பேன்...!
இது சத்தியம் ,,,,,,,,,,,,,,, இது சத்தியம்


உந்தன் குறும்புகள்
ம்ம்ம்
முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கல்லூரி வாசலிலே நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்